தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது. இந்நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக எஸ்.டி.பி.ஐ கட்சி அறிவித்துள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் பொதுச்செயலாளர் அபூபக்கர் சித்திக், செய்தியாளர்களிடம் கூறியதாவது : “தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளை ஒழிப்போம் என்பதே பாஜகவின் முழக்கமாக இருந்தது. ஆனால் திராவிட கட்சி மேலே சவாரி செய்ய வந்திருக்கிறார்கள்.
பாஜகவை பொறுத்தவரை தமக்குச் சாதகமாக வேண்டுமென்றால் யார் காலிலும் விழுவார்கள். தமக்குத் தேவையில்லை என்றால் யாரை வேண்டுமானாலும் எதிர்ப்பார்கள். பாஜகவுடன் கூட்டணி வைத்த முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும். பாஜக கூட்டணிக் கட்சிகளை எஸ்டிபிஐ கட்சி அங்கீகரிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.