பெரம்பூர் ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐ.சி.எப்.) ஏ.சி. மின்சார ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி கடந்த பிப்ரவரி மாதம் முடிவடைந்தது. கடற்கரை-செங்கல்பட்டு இடையே ஏ.சி. மின்சார ரயில் சேவை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு இன்று முதல் தினமும் காலை 7 மணி மற்றும் மதியம் 3.45 மணிக்கு இயக்கப்படுகிறது. மேலும் மறுமார்க்கமாக செங்கல்பட்டிலிருந்து காலை 9 மணி மற்றும் மதியம் 5.45 மணிக்கு இயக்கப்படுகிறது.
புறநகர் ஏ.சி. மின்சார ரயிலில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
கடற்கரை – எழும்பூர் இடையே ரூ.35
கடற்கரை – மாம்பலம் இடையே ரூ.40
கடற்கரை – கிண்டி இடையே ரூ.60
கடற்கரை – தாம்பரம் இடையே ரூ.85
கடற்கரை – செங்கல்பட்டு இடையே ரூ.105
செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரூ.85
தாம்பரம் – எழும்பூர் இடையே ரூ.60 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.