சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவம், வைணவம் குறித்தும், பெண்கள் குறித்தும் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில், தி.மு.க.வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். பின்னர், தன்னுடைய கருத்துக்கு அவர் மன்னிப்பு கேட்டார்.
அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றமும் தெரிவித்தது. இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக நாடு முழுவதும் காவல் நிலையங்களில் புகார் அளிக்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.