சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு, இடது முழங்காலில் அறுவைசிகிச்சை நடந்துள்ளது. இதனால் அந்த காலை அவரால் இயல்பாக நகர்த்த முடியாமல் திணறுகிறார். சமீபத்திய போட்டியின்போது இதை நேரடியாகவே பார்க்க முடிந்தது.
40 ஓவர்களும் அவரால் களத்தில் நிற்க முடியாது என்பதால் தான், ருதுராஜை கேப்டனாக அறிவித்தனர். ஆனால் இந்திய அணியின் ஒன் டவுனுக்கு ஆசைப்பட்டு, கிடைத்த வாய்ப்பினை அவர் வீணடித்துக் கொண்டு விட்டார். இதனால் மறுபடியும் கேப்டனாக தோனியே நீடிக்கிறார்.’
இந்தநிலையில் தோனியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, சில போட்டிகளில் அவரை Impact வீரராக பயன்படுத்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாம். அப்படி தோனி பிளேயிங் லெவனில் இல்லாமல் போனால், அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை சிவம் துபே ஏற்பார் என்றும், டெவன் கான்வே விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”நம்ம சென்னைக்கு என்ன தான் ஆச்சு?” என்று, சமூக வலைதளங்களில் வேதனை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்த 2010ம் ஆண்டில், இதேபோல தொடரின் ஆரம்பத்தில் 2 வெற்றிகளுடன் இருந்த CSK, அதற்குப்பிறகு உயிர்த்தெழுந்து கோப்பையையும் வென்றது.
கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் கழித்து, மீண்டும் அதுபோன்ற மோசமான சூழ்நிலை சென்னைக்கு ஏற்பட்டுள்ளது. 2010ம் ஆண்டுபோல மீண்டும் Comeback கொடுத்து, ரசிகர்களுக்கு CSK ஆறுதல் அளிக்குமா?