Saturday, April 19, 2025

‘மீண்டும் ஒரு காயம்’ 21 வயசு வீரரை பெரும் தொகைக்கு ‘தூக்கிய’ CSK

வரலாற்றில் இல்லாத நிறைய விஷயங்கள் முதன்முறையாக, சென்னை சூப்பர் கிங்ஸில் நடந்து வருகின்றன. நீண்டகாலமாக அணியின் கேப்டனாக இருந்த தோனி, ருதுராஜிடம் கேப்டன் பொறுப்பை கடந்தாண்டு அளித்தார்.

ஆனால் அவரின் தலைமையில் அணி கடும் சரிவை சந்தித்தது. இதனால் மிரண்டு போன CSK, மீண்டும் தோனியை கேப்டனாக்கி அழகு பார்த்து வருகிறது. இது மட்டுமின்றி 20 வயது ஷேக் ரஷீதுக்கு ஒபனிங் அளித்தது.

இன்னொரு ஆச்சரியமாக 17 வயது மும்பை வீரர் ஆயுஷ் மத்ரேவை, அணியில் எடுத்து அவருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளனர். தற்போது மேலும் ஒரு சர்ப்ரைஸ் ஆக, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் dewald brevisஐ 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கு எடுத்துள்ளதாக, அறிவித்து உள்ளனர்.

சென்னை அணியின் gurjapneet singh காயம் அடைந்ததால், அவருக்கு பதிலாக dewald brevisக்கு இடம் கிடைத்துள்ளது. ஒரு நேரம் ‘அங்கிள்ஸ் அணி’ என்று கிண்டல் செய்யப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போது இளைஞர்களின் கூடாரமாக மாறி வருகிறது.

இதைப்பார்த்த ரசிகர்கள், ”நம்ம சென்னை கண்டிப்பா Comeback கொடுக்கும்,” என்று, சமூக வலைதளங்களில் CSKக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Latest news