இயக்குனர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி வெளியானது. இப்படத்தில் த்ரிஷா, சிம்ரன், பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், ப்ரியா பிரகாஷ் வாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே வசூலை வாரி குவித்து வருகிறது. இப்படம் வெளியாகி ஒரு வாரமே ஆன நிலையில் இந்தியாவில் ரூ.112 கோடி வரை வசூலித்துள்ளது.
‘குட் பேட் அக்லி’ படத்திற்கு கேரளாவில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால் 100 ஸ்கிரீன்களில் இருந்து 200 ஸ்கிரீன்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.