Saturday, April 19, 2025

‘அந்த’ 2 பேரும் தேவையில்ல Entry கொடுக்கும் ‘தமிழக’ வீரர்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, Play Offக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இனிவரும் அனைத்து போட்டிகளையுமே வாழ்வா? சாவா? மோடில் தான் ஆடியாக வேண்டும். கேப்டனாக மகேந்திர சிங் தோனி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்தநிலையில் பிளேயிங் லெவனில் தமிழக வீரர் ஆண்ட்ரே சித்தார்த்துக்கு, இடமளிக்க தோனி முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் சங்கருக்கு எக்கச்சக்க வாய்ப்புகள் அளித்தும் கூட, அவர் தன்னை இன்னும் நிரூபிக்கவில்லை.

எனவே விஜய் சங்கரையும், டெத் ஓவர்களில் தொடர்ச்சியாக சொதப்பும் பதிரனாவையும் பெஞ்சில் அமர வைத்து அவர்களுக்கு பதிலாக சித்தார்த், நாதன் எல்லீஸை உள்ளே கொண்டுவர, தோனி வியூகம் வகுத்து வருகிறாராம்.

இதனால் ஏப்ரல் 20ம் தேதி மும்பை இந்தியன்ஸ்க்கு எதிரான போட்டியில், CSK பிளேயிங் லெவனில் ஏகப்பட்ட மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப் படுகிறது.

Latest news