இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜியோ ஹாட்ஸ்டார் இரண்டு மாதங்களுக்குள் தனது முதல் மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த OTT பிளாட்ஃபார்ம் சுமார் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தாண்டி உலகின் மூன்றாவது பெரிய OTT தளமாக மாறியுள்ளது.
நடந்துவரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) மீதான கிரிக்கெட் ரசிகர்களின் வெறியே இதற்கு ஒரு முக்கிய காரணம். OTT பிளாட்ஃபார்ம்களில் நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ மட்டுமே முன்னிலை வகித்த நிலையில், தற்போது 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களைத் தாண்டி, உலகளாவிய OTT சந்தையில் ஜியோ ஹாட்ஸ்டார் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.