Wednesday, December 24, 2025

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி கிடையாது – தம்பிதுரை அறிவிப்பு

தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தது.

தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியதாக தகவல் பரவிய நிலையில் அதிமுக எம்பி தம்பிதுரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி கிடையாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக எம்பி தம்பிதுரை, தமிழகத்தில் இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததில்லை, இனியும் நடக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார். 2026 எடப்பாடி பழனிசாமி தனியாக தான் ஆட்சி நடத்துவார், கூட்டணி ஆட்சி கிடையாது எனவும் எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

Related News

Latest News