சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளான இன்று, தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 269பிறந்த நாளான இன்று, சென்னை கிண்டி திரு.வி.க தொழிற்பேட்டை வளாகத்தில், தீரன் சின்னமலை உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் முத்துசாமி, செந்தில் பாலாஜி, சக்கரபாணி, மா. சுப்ரமணியன், சாமிநாதன், கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.மேலும் சென்னை மேயர் பிரியா துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் உடனிருந்து அஞ்சலி செலுத்தினார்.