நடப்பு IPL தொடரில் 43 வயது தோனி மீண்டும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த ஆரம்பித்து உள்ளார். அவரின் தலைமையில் கீழ் அணியில் பல்வேறு மாற்றங்கள் சத்தமில்லாமல் நடந்து வருகின்றன. இதனை லக்னோவுக்கு எதிரான போட்டியிலேயே பார்க்க முடிந்தது.
என்றாலும் Play Off செல்ல வேண்டும் என்றால், மீதமுள்ள 7 போட்டிகளில் குறைந்தது 6 போட்டிகளையாவது CSK வெல்ல வேண்டும். இதனால் பிளெயிங் லெவனில் பல்வேறு அதிரடி மாற்றங்களை, தோனி மேற்கொண்டு வருகிறாராம்.
அதன்படி டெவன் கான்வே, ரவிச்சந்திரன் அஸ்வின், ராகுல் திரிபாதி ஆகியோருக்கு இனி அணியில் இடமில்லை என்று தெரிகிறது. 17 வயது மும்பை வீரர் ஆயுஷ் மத்ரேவுடன், ரச்சின் ரவீந்திரா ஓபனிங் இறங்கிறார்.
ஒன் டவுனில் ஷேக் ரஷீத் 4வது, 5வது இடங்களில் முறையே சிவம் துபே, விஜய் சங்கர் இறங்கி ஆடுவார்கள். 6வது,7வது இடங்களில் ஜடேஜா, தோனி களமிறங்க உள்ளனர். இந்த பேட்டிங் ஆர்டர் நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும் என தோனி நினைக்கிறாராம்.
பந்துவீச்சில் பெரிதாக மாற்றங்கள் தேவையில்லை என்று, கடந்த போட்டியிலேயே தோனி பேசியிருந்தார். இதனால் நூர் அஹமது, கலீல் அஹமது, மதீஷா பதிரனாவுடன் அன்ஷூல் கம்போஜும் அணியில் இடம் பெறுவார்.
Impact வீரர்களாக ஷ்ரேயாஸ் கோபால், ஜேமி ஓவர்டன், வன்ஷ் பேடி மூவரில் சூழலுக்குத் தகுந்தாற்போல ஒரு வீரரை தோனி தேர்வு செய்து கொள்வார். மும்பைக்கு எதிரான போட்டியில் சென்னை வென்றால், எதிர்வரும் போட்டிகளில் CSK அணியில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது.
இந்த பிளேயிங் லெவன் ஓகே என்றாலும், சென்னை தொடர்ந்து விஜய் சங்கருக்கு வாய்ப்புகள் அளிப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருக்கிறது. அவரை நீக்கிவிட்டு, வன்ஷ் பேடிக்கு அந்த இடத்தை கொடுங்கள் என்று, சமூக வலைதளங்களின் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.