Saturday, April 19, 2025

இனிமே ‘சிங்கப்பாதை’ தான் RCB வீரரைத் ‘தூக்கிய’ காவ்யா மாறன்

கடந்த ஆண்டு பைனலுக்கு அசால்ட்டாக சென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால், இந்தாண்டு Play Offக்கு முன்னேறுவதே பெரும்பாடாக உள்ளது. நடப்பு IPL தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் SRHம் ஒன்று.

IPL வரலாற்றில் 300 ரன்களை அடிக்கும் முதல் அணியாக இருக்கும் என, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் ஓபனிங்கில் அசத்திய அந்த அணி, அடுத்தடுத்து தோல்விகளால் துவண்டு போய் கிடக்கிறது. என்றாலும் கடைசியாக பஞ்சாப் அணியை வீழ்த்தியதால், எப்படியும் Play Off சென்று விடலாம் என்று Sketch போட்டு வருகிறது.

இந்தநிலையில் SRHன் பேட்டிங் ஆர்டரால் நொந்துபோன உரிமையாளர் காவ்யா மாறன், சத்தமில்லாமல் சம்பவம் ஒன்றை செய்துள்ளார். காயத்தால் விலகிய ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜம்பாவுக்கு பதிலாக, RCB வீரர் Smaran Ravichandranஐ  தட்டித் தூக்கி இருக்கிறார்.

IPL தொடரின் ஆரம்பத்தில் இருந்தே, Smaran பெங்களூரு கேம்பில் தான் இருந்தார். ஆனால் ஏலத்தில் எடுக்காததாலும், வீரர்கள் யாருக்கும் காயமில்லை என்பதாலும், RCBயால் அவரைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. 21 வயதாகும் Smaran RCB பயிற்சி முகாமில், வெறும் 33 பந்துகளில் 88 ரன்களைக் குவித்து அசத்தினார்.

முதல்தர போட்டிகள் மட்டுமின்றி, உள்ளூர் T20 தொடர்களிலும் இவரின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில், டபுள் செஞ்சுரி அடித்து சாதித்துள்ளார். இதைப்பார்த்த காவ்யா மாறன் கழுகுபோல காத்திருந்து, அவரை 30 லட்சம் ரூபாய்க்கு தட்டித் தூக்கியுள்ளார்.

ஹைதராபாத்தின் பலமே பேட்டிங் தான் என்பதால், அதற்கு மேலும் வலு சேர்ப்பது போல Smaran உள்ளே வந்துள்ளார். அவரின் வரவு ஹைதராபாத்தின் Play Off கனவினை நனவாக்குமா? 

Latest news