தமிழகம் உள்பட நாடு முழுவதும் பாஜகவின் உள்கட்சி தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து பாஜக தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் பாஜக இளைஞர் பிரிவின் தேசிய தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட உள்ளதாக கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதாவது பாஜக யுவமோர்ச்சா (BJYM) பிரிவு தேசிய தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.