இந்த 2025ம் ஆண்டு உண்மையிலேயே அஜித்திற்கு பொன்னானதொரு ஆண்டு தான். கார் ரேஸில் வெற்றி, பத்ம பூஷண் விருது, அடுத்தடுத்து இரண்டு படங்கள் ரிலீஸ் என்று, ரசிகர்களை கொண்டாட்ட மோடிலேயே வைத்துள்ளார். பிப்ரவரி மாதம் வெளியான விடாமுயற்சி, ரசிகர்களுக்கு முழு திருப்தியை அளிக்கவில்லை.
அதற்கும் சேர்த்து வட்டியும், முதலுமாக ‘குட் பேட் அக்லி’யில் ஆதிக் உடன் இணைந்து, ரசிகர்களுக்கு தலைவாழை விருந்தே வைத்து விட்டார். வெளியான 5 நாட்களில் உலகம் முழுவதும் இப்படம், 101 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளது.
”இனி இந்த ஆண்டு முழுவதும் கார் ரேஸ் தான் நோ ஷூட்டிங்” என, முன்பே அஜித் அறிவித்து விட்டார். இந்தநிலையில் அவரது பிறந்தநாளான மே 1ம் தேதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக, தல நடிப்பில் வெளியாகி ரசிகர்களை அதிகம் கவர்ந்த, ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’, ‘வீரம்’ இரண்டு படங்களும் ரீ-ரிலீஸ் ஆகின்றன.
குறிப்பாக 25 வருடங்கள் கழித்து கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் ரிலீஸ் ஆவது, ரசிகர்கள் மத்தியில் பெருத்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரொமான்ஸ், ஆக்ஷன் என இரண்டு படங்களுமே ரசிகர்களின் பேவரைட் என்பதால், அஜித் ரசிகர்கள் தற்போது, ”கொளுத்துங்கடா பட்டாச’ என சமூக வலைதளங்களில் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.