Wednesday, April 16, 2025

வாகன ஓட்டிகள் நோட் பண்ணிக்கோங்க! 2 வாரங்களில் அமலுக்கு வரும் புதிய நடைமுறை! வரவிருக்கும் அதிரடி மாற்றம்!

“ஒரு அவசரத்துக்கு சட்டுன்னு போக முடியுதா? இந்த சுங்கச்சாவடி-லயே 5, 10 நிமிஷம் வரிசைல நிற்க வேண்டி இருக்கு…” என்று கரித்துக்கொட்ட வேண்டிய அவசியம் இனி இல்லை. 

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் உட்கட்டமைப்பை நவீனப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதன் ஒரு பகுதியாக டோல் கட்டண வசூலை அடுத்த நிலைக்கு கொண்டுசெல்ல மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி இனி டோல் கட்டணம் செலுத்தச் சுங்கச்சாவடியில் நின்று Time Waste பண்ண தேவையில்லை. GPS மூலம் டோல் கட்டணம் தானாகக் வசூலிக்கப்பட்டுவிடும் எனவும் அடுத்த 2 வாரங்களில் இது செயல்பாட்டுக்கு வரும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைகளில் தங்கு தடையில்லாமல் பயணம் செய்ய ஒரு முக்கிய முன்னெடுப்பாக மத்திய அரசு நாடு முழுக்க சாட்டிலைட் அடிப்படையிலான புதிய சுங்க கொள்கையை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண வசூலிக்கும் முறை அடுத்த 15 நாட்களுக்குள் வழக்கத்துக்கு வரும் என்று மத்தியச் சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இப்போது Fast tag முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகும் பல சுங்கச் சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டி இருப்பதால் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகின்றனர். அந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணவும் எரிபொருளைச் சேமிக்கும் நோக்கிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் பயண நேரத்தைக் குறைப்பது போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த சாட்டிலைட் அடிப்படையிலான சுங்க கட்டண முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

சாட்டிலைட் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு சுங்க கட்டண வசூல் நடைமுறைக்கு வந்தால் அது நமது நாட்டின் போக்குவரத்து உட்கட்டமைப்பிற்கு மிகப் பெரிய உத்வேகத்தை தரும். நெடுஞ்சாலைகளில் பயணங்கள் இன்னும் விரைவாகவும் ஆக்கப்பூர்வமானதாகவும் மாறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் சாட்டிலைட் அடிப்படையிலான இந்த சுங்கக் கட்டணம் முதலில் சோதனை முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு, பின்னர் விரிவுபடுத்தப்படும் என்று தகவல்கள் சொல்கின்றன.

Latest news