கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி, ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக அவர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். அதன்பிறகு 2022 ஜனவரி 5 ஆம் தேதி ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்பொழுது தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கு சட்ட அனுமதி கிடைத்துள்ளது எனவும், அதன் அடிப்படையில் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள புகார்கள் மீதான குற்றப்பத்திரிக்கை இன்னும் ஓரிரு நாட்களில் தமிழ்நாடு காவல்துறை தாக்கல் செய்யும் என பிரமாண பத்திரத்தில் எழுத்து பூர்வமாக தமிழ்நாடு அரசாங்கம் தாக்கல் செய்துள்ளது.