Saturday, April 19, 2025

‘கைவசம்’ 2 வெற்றிகள் மட்டுமே CSKவிற்கு Play Off ‘சான்ஸ்’ இருக்கா?

முதன்முறையாக 5 தோல்விகள், ஒரு கேப்டன் மாற்றம், 43 வயது தோனியை கேப்டனாக அறிவித்தது என்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இந்த வருஷம் ஏகப்பட்ட மாற்றங்கள். தோனி தலைமையில் லக்னோவை வீழ்த்தி, ரசிகர்களுக்கு சற்றே ஆறுதல் அளித்துள்ளது சென்னை.

என்றாலும் இன்னும் பாயிண்ட் டேபிளின் அடியில் தான் உள்ளது. இந்தநிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு Play Off வாய்ப்பு இன்னும் மிச்சமிருக்கிறதா?, என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

தற்போது சென்னை அணி 4 பாயிண்ட்களை கைவசம் வைத்துள்ளது. பாயிண்ட் டேபிளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு மட்டுமே, Play Off கதவு திறக்கும். இதில் 2 அணிகள் ஒரே பாயிண்டில் இருந்தால், நெட் ரன்ரேட் அடிப்படையில், அவர்களுக்கான Play Off வாய்ப்பு தீர்மானிக்கப்படும்.

மொத்தமுள்ள 14 போட்டிகளில் சென்னை முதல் பாதியை ஆடிவிட்டது. அடுத்து வரும் 7 போட்டிகள் தான் நடப்பு IPL தொடரில் சென்னையின் தலையெழுத்தை தீர்மானிக்க போகிறது. அடுத்ததாக மும்பை, ஹைதராபாத், பஞ்சாப், பெங்களூரு, கொல்கத்தா, ராஜஸ்தான், குஜராத் அணிகளுடன் CSK மோதவுள்ளது.

இதில் குறைந்தபட்சம் 6 வெற்றிகளை பெற்றால், சென்னை அணி Play Off செல்லலாம். 7 போட்டியிலும் வென்றால், நெட் ரன்ரேட் மற்றும் கால்குலேட்டர் என எந்த தொந்தரவும் இல்லாமல், ‘ராஜா பஹவூத்’ போல ஜம்மென Play Offல் கால் பதிக்கலாம்.

ஆனால் ஏதேனும் 2 போட்டிகளில் தோல்வி அடைந்தாலும் கூட, சென்னையின் Play Off கனவினை குழி தோண்டி புதைக்க வேண்டியது தான். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் மேற்கண்ட 7 போட்டிகளில், 3 போட்டிகளை சேப்பாக்கம் மைதானத்தில் CSK ஆடவிருக்கிறது.

சேப்பாக்கம் மைதானத்திற்கும், சென்னைக்கும் ராசியில்லை என்பதால் இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் Play Offக்கு செல்லுமா? இல்லையா? என்பதை, நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest news