Saturday, April 19, 2025

இனி இவருக்கு பதில் ‘இவர்’ CSK அதிகாரப்பூர்வ ‘அறிவிப்பு’

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த நாளும் வந்துவிட்டது. பாயிண்ட் டேபிளின் அடியில் கிடந்த ஹைதராபாத், மும்பை, சென்னை அணிகள், மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பி உள்ளன. இதனால் IPL தொடர் தற்போது சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது.

குறிப்பாக லக்னோவை வீழ்த்தி சென்னை வெற்றிப்பாதைக்குத் திரும்பியது, CSK ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீண்டும் கேப்டனாக வந்த தோனி முதல் போட்டியை சாமிக்கு விட்டு, இரண்டாவது போட்டியில் பார்முக்குத் திரும்பி இருக்கிறார்.

இதற்கிடையில் காயமடைந்த முன்னாள் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக, மும்பை அணியின் 17வயது வீரர் ஆயுஷ் மத்ரேவை CSK எடுத்துள்ளதாக, நாம் முன்பே செய்தி வெளியிட்டு இருந்தோம். அது தற்போது உண்மையாகி விட்டது.

ருதுராஜிற்கு பதிலாக ஆயுஷ் மத்ரேவை எடுத்துள்ளோம் என்று, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வருகின்ற ஏப்ரல் 20ம் தேதி மும்பைக்கு எதிரான போட்டியில், ஆயுஷ் மத்ரேவை களமிறக்க தோனி முடிவு செய்துள்ளாராம்.

லக்னோவிற்கு எதிரான போட்டியில் இளம்வீரர்கள் ஷேக் ரஷீத், அன்ஷூல் கம்போஜ் இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த வரிசையில் தற்போது ஆயுஷ் மத்ரே களம் காணவுள்ளார். இதனால் வரும் போட்டிகளில் விஜய் ஷங்கர், பெஞ்சில் அமர வைக்கப்படலாம் என தெரிகிறது.

Latest news