Tuesday, July 1, 2025

நடிகரும் இயக்குனருமான எஸ்.எஸ் ஸ்டான்லி காலமானார்

கடந்த 2002-ம் ஆண்டு ஸ்ரீகாந்த், சிநேகா நடிப்பில் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தை இயக்கியவர் இயக்குனர் எஸ்.எஸ் ஸ்டான்லி. இதையடுத்து தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ ‘மெர்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ உள்ளிட்ட படங்களை இயக்கினார்.

2007ம் ஆண்டு வெளியான ‘ பெரியார் ‘ படத்தில் அறிஞர் அண்ணாவாக நடித்து கவனம் பெற்றார். கடைசியாக விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று காலமானார். அவருக்கு வயது 58. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news