Monday, December 29, 2025

“பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமா இருக்கு” – அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ பேச்சால் பரபரப்பு

சில தினங்கள் முன் சென்னை வந்த அமித் ஷா, பாஜக – அதிமுக கூட்டணியை உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அதிமுக – பாஜக கூட்டணி குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் பேசுகையில்,பாஜகவுடன் கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம், அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும் என்றார்.

முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன் பேசுகையில், நாதழுதழுக்க குரல் உடைந்து, கட்சியை உடைக்க பார்க்கின்றனர், நிர்பந்தம் காரணமாக கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

Related News

Latest News