புதிய வகையான FASTag மே 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி இதை உறுதி செய்துள்ளார். இதன் மூலம் FASTag பயன்படுத்தும் முறை மற்றும் கட்டணம் வசூலிக்கும் முறை முழுமையாக மாற்றம் பெறுகிறது.
இந்தியாவில், தேசிய நெடுஞ்சாலைகளில் செயற்கைக்கோள் அடிப்படையிலான டோல் கட்டண முறைகள் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது முறைகேடுகளை தவிர்ப்பதற்காக வருகிறது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) இந்த புதிய முறையை விரைவில் அறிமுகப்படுத்தும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்த புதிய FASTag விதிகளின் கீழ், இந்திய ரிசர்வ் வங்கி FASTag மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை இ-மேண்டேட் கட்டமைப்பில் இணைத்து உள்ளது. இது கிரெடிட் கார்டு ஆட்டோபேமெண்ட் போல செயல்படும். பாஸ்ட் டாக் கணக்கில் பணம் குறைந்ததும், வங்கி கணக்கிலிருந்து தானாக பணம் சேர்க்கப்படும்.
இதனால் FASTag ரீசார்ஜ் செய்வதில் தொல்லை இல்லாமல் பயனர் அனுபவம் மேம்படும்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை கழகம் ‘ஒரு வாகனம், ஒரு FASTag’ என்ற புதிய முறை செயல்படுத்தவுள்ளதால், முறைகேடுகளை தடுக்க முடியும். ஆனால், இதில் 3 முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன:
- 5 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட FASTag-களை உடனே நீக்க வேண்டும்.
- 3 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட FASTag-களில் KYC மாற்றம் செய்ய வேண்டும்.
- FASTag வாகனத்தின் முன் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில் இரட்டை தொகை கட்ட வேண்டும்.
FASTag முறையில் பலர் அதிக சுங்கவரி வசூலிக்கப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர். பல இடங்களில் வழக்கமான கட்டணத்தை விட 100-200 ரூபாய் அதிகமாக வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.