பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு மர்ம நபர் ஒருவர் மூலம் மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கானின் வீடு புகுந்து அவரை கொலை செய்வோம் என்றும், அவரது காரை வெடிக்கச் செய்வோம் என மும்பை போக்குவரத்துத் துறையின் வாட்ஸ்அப் எண்ணுக்கு மிரட்டல் செய்தி அனுப்பப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த ஆண்டு சல்மான் கான் வசிக்கும் மும்பையின் பந்த்ரா இல்லத்துக்கு வெளியே இதே நாளில் மர்ம நபர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.