Tuesday, April 22, 2025

மின்சாரம் இல்லை என புகார் அளித்தவரை மிரட்டிய மின் ஊழியர்

திருவண்ணாமலையில் மின்சாரம் இல்லை என புகார் அளித்தவரை மின் ஊழியர் வீடு தேடிச்சென்று மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுப்படுத்தி உள்ளது

திருவண்ணாமலை மாவட்டம், வடமாதிமங்கலம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட கீழ்ப்பட்டு கிராமத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து அவரது வீட்டிற்கு ராஜா மற்றும் முருகன் ஆகிய 2 மின்வாரிய பணியாளர்கள் சென்று,
மது போதையில் வந்து மிரட்டி விட்டுள்ளனர். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது. மேலும் மின்சாரம் துண்டிப்பு தொடர்பாக புகார் அளித்த நபரை, மின் ஊழியர்கள் வீடு தேடி சென்று மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மின்சாரத்துறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Latest news