சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாள்தோறும் 160 ரயில்களும், எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து 100 ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. ரயில் பயணிகள் குறிப்பிட்ட அளவு மட்டுமே சுமைகளை (லக்கேஜ்) கொண்டு செல்ல வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. ஆனால் சமீப காலமாக பயணிகள் கூடுதல் சுமை ஏற்றி செல்வதாக தெற்கு ரயில்வேக்கு புகார் வந்தது.
இந்நிலையில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் சுமை எடுத்துச் செல்லும் பயணிகளிடம் கட்டணம் விதிக்கப்படும் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலான எடையில் உடைமைகளை கொண்டு வரும் பயணிகளுக்கு 10 முதல் 15 கிலோ வரையிலான கூடுதல் சுமைக்கு ஒவ்வொரு கிலோவுக்கும் 1.5 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.