ஒரே ஒரு வெற்றி தங்களின் மனநிலையை முற்றிலும் மாற்றிவிடும் என CSK அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹசி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில், தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்று சொதப்பி வரும் CSK, ரசிகர்களை மீளா சோகத்தில் வாட்டி வருகிறது. இந்நிலையில், தொடர் தோல்விகள் குறித்து பேசிய மைக் ஹசி, நடப்பு சீசனில் நாங்கள் சரியாக ஆடவில்லை என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
எனினும் ஒரே ஒரு வெற்றி தங்களின் மனநிலையை முற்றிலும் மாற்றிவிடும் என நம்பிக்கை தெரிவித்திருக்கும் ஹசி, அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு விரைவில் வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.