பாஜகவோடு கூட்டணி வைக்கமாட்டோம் என பேசி வந்த அதிமுக, நேற்று மீண்டும் பாஜகவோடு கூட்டணி வைத்துள்ளது. இதனை திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி ஒரு அற்புதமான வெற்றிக்கூட்டணியை அமைத்துள்ளார். அடுத்த ஆண்டு மே மாதம் சட்டமன்றத்தின் கதாநாயகனாக, முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி செல்வார். அதிமுக, பாஜக கூட்டணியை பார்த்து திமுக பயந்துபோயுள்ளது என அவர் பேசியுள்ளார்.