Saturday, April 19, 2025

“எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவுக்கு துரோகம் செய்து விட்டார்” : கனிமொழி பேட்டி

திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியாதவது : இனி ஒரு போதும், பாஜகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என தெரிவித்த பழனிசாமி, மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்.

அதிமுகவும் பாஜகவும் கூட்டணியை விட்டு பிரிந்தாலும் தொடர்பில்தான் இருக்கிறார்கள் என முதல்வர் ஸ்டாலின் கூறி வந்தார். இப்பொது அது உண்மையாகிவிட்டது. யார் தலைமையில் கூட்டணி அமைகிறதோ, அவர்கள் தான் கூட்டணியை அறிவிக்க வேண்டும். ஆனால், அந்த மேடையில் பேசுவதற்கு கூட, பழனிசாமிக்கு உரிமை இல்லாத நிலையில், அதிமுக – பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., தலைவர்களை எல்லாம் இழிவாக பேசக்கூடிய, பா.ஜ., தலைவர்களை, தன் வீட்டிற்கு அழைத்து, விருந்து அளிக்க வேண்டிய நிலைக்கு பழனிசாமி தள்ளப்பட்டுள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்து அதிமுகவுக்கும், தமிழக மக்களுக்கும், எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்துள்ளார் என அவர் கூறியுள்ளார்.

Latest news