Saturday, April 19, 2025

மீண்டும் இணைந்தது அதிமுக – பாஜக கூட்டணி – உறுதி செய்தார் அமித்ஷா

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்றிரவு சென்னை வந்தார். இதில் அதிமுக- பாஜக கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

மத்திய அமைச்சர் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கூட்டணி குறித்து பேசி வந்தனர். இந்த மேடையில் அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் உடன் இருந்தனர்.

இந்நிலையில் அதிமுக பாஜக கூட்டணி உறுதியானது. தேசிய அளவில் மோடி தலைமையிலும் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் கூட்டணி என அமித்ஷா தெரிவித்துள்ளார்.

Latest news