கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பணி நீக்கங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்நிலையில் கூகுள் நிறுவனம் மீண்டும் பணி நீக்கத்தில் ஈடுப்ட்டுள்ளது. தனது இயங்குதளங்கள் மற்றும் சாதனப் பிரிவில் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
ஆண்ட்ராய்டு மென்பொருள், பிக்சல் போன்கள் மற்றும் குரோம் உலாவி போன்றவற்றில் வேலை செய்யும் பிரிவில் இந்த பணிநீக்கம் நடந்துள்ளது.