பாஜக தலைவர் தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தேர்தல் விருப்பமனு துவங்கிய நிலையில் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் விருப்ப மனுவில் அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா ஆகியோர் பரிந்துரை செய்து கையெழுத்திட்டனர்.
இந்நிலையில் தமிழக பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பா.ஜ.க.வின் மாநில தலைவர் மாற்றப்படும் பட்சத்தில் அண்ணாமலைக்கு தென்மாநில அளவில் புதிய பொறுப்பு வழங்க வாய்ப்பு என தகவல் வெளியாகி உள்ளது.