Saturday, April 19, 2025

Fleming எங்கேயுமே ‘ஜெயிச்சது’ கெடையாது ‘புட்டுப்புட்டு’ வைத்த டெல்லி Coach

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், டெல்லி கேபிடல்ஸ் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ஹேமங் பதானி, அண்மையில் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.

நடப்பு IPL தொடரில் 4 போட்டிகளையும் வென்று, டெல்லி கேபிடல்ஸ் அணி தன்னுடைய வரலாற்றை மாற்றி எழுதி வருகிறது. இதனால் புள்ளிப் பட்டியலிலும் டெல்லிக்கே முதலிடம். அக்சர் படேல் கேப்டனாக இருக்கும் அந்த அணிக்கு, தமிழகத்தை சேர்ந்த ஹேமங் பதானி தான் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார்.

அடிக்கும் கோடை வெயிலுக்கு ஈடாக, தற்போது IPL தொடரும் சூடு பிடித்துள்ளது. இந்தநிலையில் பதானி CSKவின் தலைமை பயிற்சியாளர், ஸ்டீபன் பிளெமிங்கை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், ” IPL தவிர்த்து வேறு எந்த கிரிக்கெட் தொடரையும் பிளெமிங் ஜெயித்ததில்லை.

SA 20, 100, Big Bash, MLC உள்ளிட்ட உலகின், பல்வேறு கிரிக்கெட் தொடர்களுக்கு பிளெமிங் Coach ஆக இருந்துள்ளார். ஆனால் எங்குமே அவர் ஜொலிக்கவில்லை. அவரது சொந்த நாடான நியூசிலாந்து அணிக்கும்,  துணை பயிற்சியாளராக பிளெமிங் பணியாற்றினார்.

அங்கும் அவருக்கு தோல்வி தான். CSKவில் மட்டும் சாதிக்கிறார் என்றால், அதற்குக் காரணம் தோனி தான். ஒரு மஹாராஜா போல அவர் தான் அணியைத் தாங்கி பிடிக்கிறார். கண்டித்து, அதட்டி, தட்டிக்கொடுத்து என்று அந்தந்த நேரத்துக்கு தகுந்தாற்போல வீரர்களை வழிநடத்துகிறார்.

கடந்த 3 ஆண்டுகளில் 2 கோப்பைகளை இந்திய வீரர்கள், தலைமை பயிற்சியாளராக இருந்த அணி தான் வென்றுள்ளது,” என்று, CSK  பயிற்சியாளர் குறித்த அத்தனை, உண்மைகளையும் புட்டுப்புட்டு வைத்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், ” இதனால தான் மறுபடியும் தோனியை கேப்டன் ஆக்கிட்டாங்க போல,” என்று கிண்டலடித்து வருகின்றனர்.

ஏலத்தில் தமிழக வீரர்களுக்கு பிளெமிங் முன்னுரிமை அளிப்பதில்லை. நியூசிலாந்து வீரர்களை மட்டுமே போட்டிபோட்டு எடுக்கிறார். என்ற குற்றச்சாட்டினை நீண்ட காலமாகவே, ரசிகர்கள் பிளெமிங் மீது முன்வைக்கின்றனர்.

அதற்கு ஏற்றாற்போல டெவன் கான்வே, டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மிட்செல் சாண்ட்னர் என, ஒருநேரம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நியூசிலாந்து சூப்பர் கிங்ஸ் அணியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest news