விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி பேசியது சர்ச்சையை ஏற்ப்டுத்தியது. அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் அவரது பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்த பதவிக்கு திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழக பாஜக வெளியிட்டுள்ள பதிவில் : பெண்களை இழிவு செய்ததோடு தமிழகத்தின் பழம்பெருமைமிக்க அடையாளமாகவும், தமிழ் மொழியை வளம் கொழிக்க வைத்த சைவ – வைணவ சமயங்களையும், அதன் புனித அடையாளங்களையும் எவ்வளவு இழிவுபடுத்திப் பேச முடியுமோ அந்த அளவுக்கு கொச்சைப்படுத்தி பேசியுள்ள பொன்முடி அதிகாரமிக்க ஒரு அமைச்சராக நீடிப்பது பேரவலம் இல்லையா?
பொன்முடியை அமைச்சர் பதவியிலிருந்து உடனடியாக நீக்குவது மட்டுமே நீங்கள் திராணியுள்ள தலைவர் மற்றும் மாண்புள்ள முதல்வர் என்பதை நிரூபிக்கும் என பதிவிடப்பட்டுள்ளது.