Saturday, April 19, 2025

ருதுராஜின் ‘இடம்’ யாருக்கு? CSKவின் ‘பிளான்’ இதுதானாம்

நடப்பு IPL தொடரில் முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது கேப்டனை மாற்றி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. மீண்டும் 43 வயது தோனி, அணியை வழி நடத்துவார் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

இதற்கிடையில் காயம் காரணமாக விலகிய ருதுராஜின் இடத்தை, சென்னை அணி யாரை வைத்து நிரப்பப் போகிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தநிலையில் ஒன் டவுனில் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு பதிலாக, இளம்வீரர் ஆயுஷ் மத்ரேவை CSK தேர்வு செய்திருப்பதாகத் தெரிகிறது.

சமீபத்தில் ராஜ்கோட்டில் இருந்த ஆயுஷ் மத்ரேவை, சென்னை அவசரமாக Trialsக்கு அழைத்தது. இதையடுத்து ஆயுஷ் சென்னை நாவலூரில் உள்ள, CSKவிற்கு சொந்தமான மைதானத்தில் பேட்டிங் செய்து காட்டினார். அவரின் பேட்டிங்கில் அணி நிர்வாகத்திற்கு முழு திருப்தியாம்.

உள்ளூர் T20 தொடர்களில் மத்ரேவின் அபார ஆட்டத்தை பார்த்துத்தான், சென்னை அவசரமாக அவரை தொடருக்கு நடுவே அழைத்தது. தற்போது ருதுராஜ் விலகி இருப்பதால் அவரின் இடத்தை, ஆயுஷ் மத்ரே நிரப்புவார் என எதிர்பார்க்கப் படுகிறது.

அதே நேரம் நீண்ட நாட்களாக வாய்ப்பினை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வன்ஷ் பேடிக்கும், ஒரு வாய்ப்பு கொடுக்க சென்னை அணி முடிவு செய்திருக்கிறதாம். எனவே இனிவரும் ஆட்டங்களில், இளம்வீரர்களை சென்னை பிளெயிங் லெவனில் நாம் எதிர்பார்க்கலாம்.

Latest news