கடந்த ஞாயிற்று கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அங்கு அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவருடைய திமுக துணை பொதுச்செயலாளர் பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில் திமுக கழக கொள்கைப் பரப்புச் செயலாளராக இருந்த திருச்சி சிவா அப்பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு தி.மு.க. துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
