சென்னை, கோயம்பேடு சந்தையில் பண்டிகை மற்றும் விழாக் காலங்களில் காய்கறிகள், பூக்கள், பழங்களின் விலை உயா்வது வழக்கம். அந்த வகையில், விஷேச நாட்கள் என்பதால் கோயம்பேடு மலா்ச் சந்தையில் பூக்களின் விலை கணிசமாக உயா்ந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை 400 ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லி 600 ரூபாக்கும் விற்பனையாறிது ஒரு கிலோ 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ முல்லை 750-க்கும் விற்பனையானது.
இதுபோல, கனகாம்பரம் ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், சாமந்தி ஒரு கிலோ 180 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அனைத்துப் பூக்களின் விலையும் உயா்ந்துள்ளதால், விவசாயிகளும் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.