கடந்த ஞாயிற்று கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் சைவ, வைணவ சமய நம்பிக்கைகளை மிகவும் கீழ்த்தரமாக ஒப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அமைச்சர் பொன்முடி அவர்களின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப் பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்துள்ளார்.