Saturday, April 19, 2025

பாஜக மாநில தலைவர் பதவி : அண்ணாமலை, நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல்?

தமிழக பாஜகவின் மாநில தலைவரை தேர்ந்தெடுக்கும் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராக உள்ளவர்கள் பாஜக மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார்கள் என தமிழக பாஜக துணைத் தலைவரும், மாநில அதிகாரியுமான சக்ரவர்த்தி அறிவித்துள்ளார்.

இதன் காரணமாக தற்போது தலைவராக இருக்கும் அண்ணாமலை மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருவரும் கட்சியில் சேர்ந்து 10 ஆண்டுகள் ஆகவில்லை என்பதால் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Latest news