Sunday, April 27, 2025

‘இந்த’ 3 விஷயத்தை மாத்தணும் கண்டிப்பா CSK ‘கப்படிக்கும்’

அதிக ரசிகர்களைக் கொண்ட அணி, அதிகமுறை பிளே ஆப்க்கு சென்ற அணி, சமூக வலைதளங்களில் அதிக பாலோயர்களைக் கொண்ட அணி, போன்ற பெருமைகள் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு உண்டு. 2008ம் ஆண்டில் இருந்து CSKவை வழிநடத்தி, 5 முறை கோப்பை வாங்கிக்கொடுத்த தோனி, 2024ம் ஆண்டில் கேப்டன் பொறுப்பினைத் துறந்தார்.

இதையடுத்து மஹாராஷ்டிராவைச் சார்ந்த ருதுராஜ் கெய்க்வாட், சென்னை அணியின் 2வது கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அவரின் தலைமையில் சென்னை ஜொலிக்கவில்லை. 2024ம் ஆண்டு பிளே ஆப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.

நடப்பு IPL தொடரில் CSK வரலாற்றிலேயே முதன்முறையாக, அடுத்தடுத்து தோல்விகளைத் தழுவி வெற்றிப்பாதைக்குத் திரும்ப முடியாமல், தத்தளித்து வருகிறது. இதனால் கேப்டனை மாற்றி விடலாமா? என்று அணி நிர்வாகம் யோசித்து வருகிறதாம்.

இந்தநிலையில் சென்னை அணி 3 விஷயங்களை மட்டும் சரிசெய்தால், நிச்சயம் பிளே ஆப்க்கு செல்லலாம் என்று விமர்சகர்கள், ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர். அதுகுறித்து இங்கே பார்க்கலாம்.

பேட்டிங்கை விட பவுலிங் தான் மோசமாக இருக்கிறது. எனவே ஷ்ரேயாஸ் கோபால், குர்பஜ்னீத் சிங், நாதன் எல்லீஸ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கலாம். மற்ற அனைத்து அணிகளுமே வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் இளம்வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளிக்கின்றன.

சென்னை பெரிதாக அடிவாங்குவது இந்த ஏரியாவில் தான். எனவே வன்ஷ் பேடி, அன்ஷூல் கம்போஜ், ஷேக் ரஷீத், கமலேஷ் நாகர்கோடி போன்றோருக்கு வாய்ப்புகள் வழங்கி, அவர்களை வளர்த்து விடலாம். இதேபோல ராகுல் திரிபாதி மிடில் ஆர்டரில் நன்றாக ஆடக்கூடியவர்.

கேப்டன் ருதுராஜூம் ஓபனராக இறங்கித்தான் அதிக ரன்களைக் குவித்துள்ளார். எனவே ருதுராஜை ஓபனராகவும், ராகுல் திரிபாதியை மிடில் ஆர்டரிலும் விளையாட வைக்கலாம்.  இந்த 3 விஷயங்களையும் செய்தால், CSK மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பி, எதிரணிகளைத் திருப்பி அடிக்கலாம்.

ஆனால் பயிற்சியாளர் பிளெமிங்கோ எங்களுக்கு அனுபவம் தான் வேண்டும் என்று, தொடர்ந்து அடம்பிடித்து வருகிறார். அவரைத்தாண்டி அணி நிர்வாகம் மேற்கண்ட மாற்றங்களை செய்ய முன்வருமா?, என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Latest news