Saturday, April 19, 2025

‘எனக்கு காது கேட்கல’..ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு குறித்த கேள்விக்கு இல.கணேசன் கிண்டல்

மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்தது.

இந்நிலையில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் கம்பன் அறநிலை- கம்பன் கழகத்தாா் சாா்பில் 87-ஆம் ஆண்டு கம்பன் திருநாள் விழா புதன்கிழமை தொடங்கியது. இதில் நாகாலாந்து மாநில ஆளுநா் இல.கணேசன் கலந்துகொண்டார்.

அப்போது அவரிடம் ஆளுநருக்கு எதிரான தீர்ப்பு குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் ‘எனக்கு காது கேட்கவில்லை, வேற மிஷின் மாற்ற வேண்டும் என கிண்டலாக பதிலளித்து அங்கிருந்து சென்றார்.

Latest news