Saturday, April 19, 2025

மைதானத்தில் நடந்த ‘அந்த’ சம்பவம் பிரீத்தி ஜிந்தாவால் ‘கடுப்பான’ தோனி

Catches Win Matches என்று சொல்வார்கள். அது நூறு சதவீதம் உண்மை என்பது சென்னை – பஞ்சாப் போட்டியில் தெரிந்தது. பவுலிங், பேட்டிங் எல்லாம் நன்றாக இருந்தாலும் கூட மகா மட்டமான பீல்டிங், CSKக்கு மீண்டும் ஒரு தோல்வியைப் பரிசளித்துள்ளது.

இந்த போட்டியில் மட்டும், கிட்டத்தட்ட 11 கேட்ச்களை சென்னை அணியினர் கோட்டை விட்டனர். இதனால் ஒரு கட்டத்தில் 83 ரன்களுக்கு 5 விக்கெட் என்று பாதாளத்தில் கிடந்த பஞ்சாப், பின்னர் வீறுகொண்டு எழுந்து 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்களை மட்டுமே இழந்து 219 ரன்களை குவித்தது.

பின்னர் சேஸிங் செய்த சென்னை அணியால் 20 ஓவர்கள் முடிவில், 201 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் பஞ்சாப் 18 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. போட்டியின்போது பஞ்சாப் அணியின் ஆபத்பாந்தவன் Shashank Singh, Noor Ahmad வீசிய 17வது ஓவரில், தூக்கியடிக்க முயற்சி செய்து, கேட்ச் கொடுத்தார்.

ஆனால் Rachin Ravindra அந்த கேட்சினை கோட்டை விட்டுவிட்டார். அதோடு அவர் வீசிய பந்து ஓவர் த்ரோ ஆக, பஞ்சாப் அணிக்கு எக்ஸ்ட்ரா ரன்னும் கிடைத்தது. இதைப்பார்த்த பஞ்சாப் கிங்ஸ் உரிமையாளர் Preity Zinta, கேலரியில் ஆடிப்பாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அதேநேரம் கிரவுண்டில் நின்று Zintaவின் கொண்டாட்டத்தைப் பார்த்த தோனிக்கு, கண்கள் சிவந்து விட்டது. தன்னுடைய அமைதியை இழந்து கோபத்துடன் முறைத்துப் பார்த்தார். இருவரின் இந்த ரியாக்ஷன்களும் சமூக வலைதளங்களில் வைரலாக, ”ஆத்தாடி! தோனி என்ன இம்புட்டு கோபப்படுறாரு” என்று, ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Latest news