சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் 16 வயதுக்குட்பட்ட இளம் பயனர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மெட்டா நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்த வயதுக்குட்பட்ட பயனர்கள் நேரலை ஒளிபரப்பு (Livestream) செய்யவோ அல்லது நேரடி செய்திகளில் (Direct Messages) உள்ள தேவையில்லாத உள்ளடக்கம் இருப்பதாக சந்தேகிக்கப்படும் படங்களை தெளிவுபடுத்தவோ பெற்றோரின் அனுமதியைப் பெற வேண்டும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்ஸ்டாகிராம் அறிமுகப்படுத்தி உள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் முதல்கட்டமாக இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பயனர்களுக்கு அமல்படுத்தப்படுகிறது. அதன்பிறகு மற்ற நாடுகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.