Friday, August 22, 2025
HTML tutorial

குமரி அனந்தன் உடலுக்கு அரசு மரியாதை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

காங்கிரஸ் மூத்த தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் நேற்று இரவு காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த தலைவர் குமரி அனந்தன் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழே தன் மூச்செனத் தமிழ்த் திருப்பணிக்காக வாழ்ந்திட்ட குமரி அனந்தன் அவர்களின் பெருவாழ்வைப் போற்றிடும் வகையில் அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை அளிக்கப்படும் என கூறியுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News