Saturday, April 19, 2025

இன்று இரவே ஆளுநர் ரவி ராஜ்பவனை விட்டு புறப்பட வேண்டும் – ஆர்.எஸ் பாரதி

மசோதாக்களை கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தன்னிச்சையாக செயல்பட மாநில ஆளுநர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என தெரிவித்தது.

இந்நிலையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியதாவது : ஆளுநராக தமிழ்நாட்டில் இருக்கின்ற ஆர் என் ரவி இந்த தீர்ப்பை ஏற்று ராஜினாமா செய்ய வேண்டும். இது மிகப்பெரிய அடி. நல்ல மாட்டுக்கு ஒரு அடி. நல்ல மனிதனுக்கு ஒரு சொல். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சுயமரியாதை இருந்தால் அவர் இன்று இரவே ராஜ்பவனை விட்டு புறப்பட்டு போகவேண்டும் என தெரிவித்தார்.

Latest news