வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை ரூ 50 உயர்த்தி மத்திய அரசு அறிவித்திருந்தது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சிலிண்டர் விலை உயர்வு குறித்து பொதுமக்கள் பலரும் பாஜக அரசை விமர்சித்து வருகின்றனர். நாங்கள் மீண்டும் விறகு அடுப்பில் சமைக்க வேண்டுமா என மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.