அடுத்தடுத்த தோல்விகளால் சென்னை அணி துவண்டு கிடக்கிறது. என்றாலும் கூட பிற அணிகள் போல இளம்வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க CSK மறுக்கிறது. இதன் காரணமாக நடப்பு IPL தொடரில், அந்த அணி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.
இந்தநிலையில் போட்டிக்கு நடுவே சென்னை அணியின் இளம்வீரர் வன்ஷ் பேடி, தூங்கி வழிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏப்ரல் 5ம் தேதி அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, சேப்பாக்கம் மைதானத்தில் எதிர்கொண்டது.
இதில் சென்னையை வீழ்த்தி டெல்லி வெற்றிவாகை சூடியது. இந்த மேட்சின் போதுதான் வன்ஷ் பேடி தூங்கியிருக்கிறார். சென்னை அணி விரைவாக 2 விக்கெட்களை இழக்க, பவர் பிளேவிலேயே ஆட்டம் போரடிக்க ஆரம்பித்தது.
அப்போது டக் அவுட்டில் இருந்த வன்ஷ் பேடி தூங்கி விட்டார். அவர் தூங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இதைப்பார்த்த ரசிகர்கள், ”பயபுள்ள நம்மள மாதிரியே இருக்கான்”, ”தூங்கிட்டார்னு அவருக்கு சான்ஸ் கொடுக்காம விட்டுறாதீங்க,” மேட்ச் எந்தளவுக்கு போரடிச்சா இப்படி தூங்கி இருப்பாரு”, இவ்வாறு விதவிதமாகக் கிண்டலடித்து வருகின்றனர்.
22 வயதான வன்ஷ் பேடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். டெல்லி T20 லீக்கில் இவர் அதிரடி காட்டியதை பார்த்துத்தான் சென்னை ஏலத்தில் எடுத்தது. ஆனால் வழக்கம்போல வாய்ப்பு கொடுக்காமல், வன்ஷ் பேடியை பெஞ்சில் அமரவைத்து அழகு பார்த்து வருகின்றனர்.