Saturday, April 19, 2025

மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் : உச்சநீதிமன்றம் கண்டனம்

சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு வருவதாக ஆளும்கட்சியினர் புகார் தெரிவித்து வருகிறார்கள்.

மசோதாக்கள், துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த ரிட் மனு மீது உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் கூறியதாவது : மாநில அரசின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரையின்படியே ஆளுநர் செயல்பட முடியும். ஆளுநர் தனது விருப்பப்படி செயல்பட முடியாது, அதற்கு அரசியலமைப்பில் இடமில்லை. ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கான அதிகாரத்தின்படி நடந்து கொள்ளவில்லை.

தமிழக சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்த முடியாது. அரசியலமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளது.

Latest news