Sunday, April 20, 2025

அதிக நன்கொடை வாங்கிய கட்சி : முதலிடத்தில் பாஜக

கடந்த 2023 – 24ம் நிதியாண்டில், அதிக நன்கொடை பெற்ற கட்சியாக, பாஜக முதல் இடத்தில் உள்ளது. அந்த கட்சி, 2,243 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி, 281 கோடி ரூபாய் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி ஒரு பைசா கூட நன்கொடை பெறவில்லை என தெரிவித்துள்ளது.

ஆம் ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி போன்றவை மிகவும் குறைவான அளவில் நன்கொடை பெற்றுள்ளது.

Latest news