Tuesday, April 8, 2025

‘தோனியால’ தான் CSK தோக்குது Pak முன்னாள் கேப்டன் ‘பரபரப்பு’ குற்றச்சாட்டு

ஹாட்ரிக் தோல்வியால் நொந்து போயிருக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலைமை தற்போது பரிதாபகரமாக மாறியுள்ளது. ஏலத்தின் போது  மிகவும் அசால்ட்டாக இருந்தது தான் இதற்கு காரணம். வழக்கம்போல நல்ல வீரர்கள் பலரையும் கோட்டை விட்டுவிட்டனர்.

இப்போது ஓபனிங், மிடில் ஆர்டர் என்று ஒட்டுமொத்த, பேட்டிங் ஆர்டருமே சிதைந்து போய் கிடக்கிறது. இதற்கு தோனி தான் காரணம் என்று, சொந்த அணி ரசிகர்களே அவரைத் திட்டித் தீர்க்கின்றனர்.

இந்தநிலையில் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் Rashid Latif, ” சென்னை அணியின் தோல்விக்கு தோனி தான் முக்கிய காரணம்”, என்று, தன்னுடைய பங்குக்கு கொளுத்திப் போட்டிருக்கிறார். இதுகுறித்து அவர், ”ஒரு விக்கெட் கீப்பரின் ஓய்வுக்கான வயது 35.

இதற்கு நானே உதாரணம். நீங்கள் தொடர்ந்து ஆடும்போது, உங்களின் நற்பெயர் குறைந்து விடும். 2019 உலகக்கோப்பை தொடரே இதற்கு நல்ல உதாரணம். அப்போது அவரின் ஆட்டம் இந்திய அணிக்கு எந்தவொரு பலனையும் அளிக்கவில்லை.

தனிப்பட்ட வீரருக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது, விளையாட்டிற்கு நல்லது கிடையாது. இப்போது சென்னை அதைத்தான் செய்து கொண்டிருக்கிறது. CSKக்கு தற்போது தேவைப்படுவது வெற்றி மட்டுமே. இதற்கு ஒன்றிரண்டு வீரர்கள் தான் காரணம் என்றால், காலத்தின் தேவையை உணர்ந்து, நீங்கள் அவர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும்,” என்று கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

2024ம் ஆண்டில் 220 ஆக இருந்த தோனியின் ஸ்ட்ரைக் ரேட், தற்போது நடப்பு IPL தொடரில் 138 ஆக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Latest news