Tuesday, April 8, 2025

அஸ்வினால் ‘வெடித்த’ உட்கட்சி பூசல் சொந்த காசில் ‘சூனியம்’ வைத்த CSK

நடப்பு IPL தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆடி வருகிறார். நீண்ட வருடங்களுக்கு பிறகு அஸ்வின் சென்னைக்கு திரும்பியதால், அவர்மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் எழுந்தன.

இதனால் தன 9 கோடியே 75 லட்சம் என்னும் பெரும்தொகைக்கு, அஸ்வினை சென்னை ஏலத்தில் எடுத்தது. ஆனால் பவுலிங்கில் அவர் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவில்லை. இந்தநிலையில் அஸ்வின் Youtube சேனலில் இனி, CSK குறித்த வீடியோக்கள் வராது என்று அதன் Admin அறிவித்துள்ளார்.

இது கிரிக்கெட் வட்டாரத்தில், மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அஸ்வின் Youtube சேனலில் The Small Council’ என்னும் பெயரில், IPL தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ராஜஸ்தான் அணியுடனான தோல்விக்கு பிறகு நடந்த விவாதத்தில், சென்னை அணியின் மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

சென்னை அணிக்காக ஆடிக்கொண்டே அஸ்வின் இவ்வாறு செய்தது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த வீடியோ சேனலில் இருந்து நீக்கப்பட்டது. சேனலில் பேசும் பீடாக் மற்றும் வித்யுத் சிவராமகிருஷ்ணன் இருவரும் சென்னையை மோசமாக விமர்சனம் செய்தனர்.

பீடாக், ”சென்னை அணி நூர் அகமதை ஏலத்தில் எடுத்தது தவறு” என்று பேசினார். சிவராமகிருஷ்ணன் இன்னும் ஒருபடி மேலே சென்று, ”நான் Scout குழுவில் இளம்வீரர்களை அடையாளம் காட்டினேன். CSK அவர்களை ஏலத்தில் எடுக்கவில்லை,” என்றார்.

மேற்கண்ட இருவரின் பேச்சும் ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இதில் கடுப்பான ரசிகர்கள், ” சென்னை அணி சொந்த காசுல சூனியம் வச்சுக்கிட்டாங்க,” என்று, தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அஸ்வினின் வீடியோக்களால் தற்போது, சொந்த அணிக்குள்ளேயே உட்கட்சி பூசல் வெடித்துள்ளது.

இதனால் வரும் போட்டிகளில், சென்னை அணி அஸ்வினை பெஞ்சில் அமர வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை.

Latest news