Tuesday, December 23, 2025

வெளியேறிய அதிமுக எம்.எல்.ஏ.க்கள்…தனி ஆளாக அமர்ந்திருந்த செங்கோட்டையன்

திமுக மீதான மதுபான ஊழல் குற்றச்சாட்டை மையப்படுத்தி அதிமுக எம்எல்ஏக்கள் இன்று தமிழக சட்டமன்றக் கூட்டத்திற்கு ‘யார் அந்த தியாகி” என்ற பேட்ச் குத்திய படி சட்டமன்றத்துக்குள் வந்தனர்.

இதற்கிடையே டாஸ்மாக் ஊழல் விவகாரம் குறித்து பேச அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வழக்கு நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அதைப்பற்றி சட்டமன்றத்தில் பேச முடியாது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

இதைத்ததோர்ந்து இபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் அவர்களை இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளியேறிய பிறகும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வெளியேறவில்லை. வழக்கம்போல எழுந்து தனது தொகுதி பிரச்சனைகள் குறித்து பேசினார்.

அதிமுகவில் இபிஎஸ் – செங்கோட்டையன் இடையே பனிப்போர் வலுத்து வரும் நிலையில், செங்கோட்டையனின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related News

Latest News